எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து உங்கள் வேலைகளை முடிக்கும் உங்களுக்கு, ஆவணி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராஜ கிரகமான சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ஞான மோட்சக் காரகன் கேதுவும் அங்கு இணைவதால் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். நன்றாகச் சென்று கொண்டிருந்த வேலைகளில் தடை, பிரச்னைகள் ஏற்படும். திட்டமிட்டிருந்த வேலைகளில் நெருக்கடி தோன்றும் என்றாலும், ஆக.25 முதல் செப்.11 வரை உங்கள் பாக்கியாதிபதி புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சோதனைகளைத் தாண்டி சாதனைகள் படைக்கக் கூடிய அளவிற்கு அனுகூலமான நிலை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்ப்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். மாதம் முழுவதும் சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் உடல் நிலையிலும், பண விவகாரங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். எதிர்பாலினரிடம் ஓரடி தள்ளி இருப்பது அவசியம். அரசு பணியாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் முடிந்தவரை நேர்மையாக செயல்படுவதும், ஒழுக்கமாக இருப்பதும் உங்களைப் பாதுகாக்கும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்களையும், அவமானத்தையும் சந்திக்கும் நிலை உருவாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வதும், தவறான நண்பர்களை விட்டு விலகுவதும் நல்லது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஆக.23
அதிர்ஷ்ட நாள்: ஆக.17,19,26,28,செப்.1,8,10
பரிகாரம் யோக நரசிம்மரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
திருவோணம்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, ஆவணி நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குருபகவான் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்பு அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். உடலில் நோய்கள் ஏற்படும். அவருடைய பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு கிடைப்பதால், செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது நன்மை தரும். இக்காலத்தில் வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. இயந்திரப் பணியில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். உங்கள் செல்வாக்கிற்கு இழுக்கு வரும் வகையில் சிலர் அவதுாறு பரப்புவதற்கு வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனமும், ஒழுக்கமும் மிக அவசியம். ஆக. 25 முதல் பிரச்னைகளை சமாளிக்கக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பு உயரும்.
சந்திராஷ்டமம்: ஆக.24
அதிர்ஷ்ட நாள்: ஆக.17,20,26,29,செப்.2,8,11
பரிகாரம் ராமநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை சேரும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்
எடுத்த வேலை எதுவாக இருந்தாலும் அதை உடனே முடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் செயல்படும் உங்களுக்கு, ஆவணி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். எதிர்பார்த்த வருமானம் தள்ளிப் போகும் என்பதால் புதிய முதலீடுகளை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்குரிய வேலைகளில் மட்டும் முழு கவனம் செலுத்துவதுடன், பிறருடைய நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல் செயல்பட்டால் நெருக்கடி இருக்காது. இல்லாவிட்டால் வேலையில் சிக்கல்களும் எதிர்ப்பாராத இடமாற்றமும் ஏற்படலாம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைப்பது அவசியம். இல்லையெனில் அரசாங்கத்திற்கு அபராதம் கட்ட வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒன்றையும் சிந்தித்து செயல்பட்டால் பண இழப்புகளை தவிர்க்கலாம். ஞானக்காரகன் குரு ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்பு அதிகரிக்கும். அஷ்டம சூரியனும், கேதுவும் உங்கள் நிலையில் பின்னடைவை ஏற்படுத்துவர். முயற்சிகளில் தடைகளை உண்டாக்குவர். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் எப்போதும் கவனம் தேவை. எதிர்பாலினரிடம் விலகி இருக்கவிட்டால் அவமானத்திற்கு ஆளாக நேரிடலாம் கவனம். பண இழப்பும் சிலருக்கு ஏற்படும். குடும்ப ஸ்தானத்திற்கு குரு பகவான் பார்வை கிடைப்பதால் குடும்பத்தினரை அனுசரிப்பதும் அவர்களின் ஆலோசனையை ஏற்பதும் நிம்மதிக்கு வழிவகுக்கும்.