நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்கும் உங்களுக்கு, ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இதுவரையில் இல்லாத பயம் மனதில் தோன்றும். எதிரிகளால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உங்கள் செயல்களில் தடை, தாமதம் ஏற்படும் என்றாலும், பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையை உயர்த்துவார். கேடயம் போல் உங்களைப் பாதுகாப்பார். சுபிட்சமான பலன்களை வழங்குவார். தடைப்பட்ட வேலைகளை நடத்தித் தருவார். பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கத்தை தீர்ப்பார். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்கை முடித்து வைப்பார். பெரிய மனிதர்களின் ஆதரவும், தெய்வ அருளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். உங்கள் சுய வாழ்க்கையில முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மற்றவர்களுக்கு முன்பாக செல்வாக்குடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவார். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பு, பதவியை வழங்க வைப்பார். திருமண வயதினருக்கு தகுதி வரன் அமையும். எந்த விதமான நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து மீளக் கூடிய நிலையை உண்டாக்குவார். சப்தம ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் நண்பர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரிப்பது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: ஆக.25
அதிர்ஷ்ட நாள்: ஆக.17,18,26,27,செப்.8,9
பரிகாரம் சரபேஸ்வரரை வழிபட சங்கடம் விலகி நன்மை நடந்தேறும்.
சதயம்
நினைத்ததை உடனே நடத்தி முடித்து விட வேண்டும் என்ற வேகத்துடன் செயல்படும் உங்களுக்கு, ஆவணி நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்துள்ள நிலையில், யோகக் காரகன் ராகு ராசிக்குள் சஞ்சரித்தாலும், ஐந்தாம் இட குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் நிலையில் இருந்த சங்கடம் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்களினண செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். நீண்ட நாளாக முடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பெரிய மனிதர்கள் சந்திப்பும் அவர்களின் உதவியும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளில் சிலர் தங்கள் வியாபாரத்தை இடமாற்றம் செய்வர். சிலர் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடியேறுவர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை எல்லாம் முடிவிற்கு வரும். ஆக. 25வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் மாதத்தின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது.
தெளிந்த ஞானமும் திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாகும். குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். பல்வேறு முயற்சிகள் செய்தும் நடைபெறாமல் இருந்த வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி உங்கள் வசமாகும். பிள்ளைகள் உங்களின் கனவை நனவாக்குவார்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறக் கூடிய நிலை உண்டாகும். மாதத்தின் தொடக்கத்திலும் கடைசி வாரத்திலும் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். எதிர்பார்த்த பணம் வரும். உங்களின் கனவுகள் நனவாகும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆக. 21 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். விலகி இருந்த உறவுகள் உங்களைத் தேடி வந்து உதவி கேட்பர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும்.
சந்திராஷ்டமம்: ஆக.27
அதிர்ஷ்ட நாள்: ஆக.17,21,26,30,செப்.3,8,12
பரிகாரம் நன்மை தருவாரை வழிபட நன்மை உண்டாகும்.
மேலும்
ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »