பதிவு செய்த நாள்
22
டிச
2012
11:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில், 25ம் ஆண்டு மண்டல பூஜை விழா துவங்கியது. வரும், 26ம் தேதி வரை விழா நடக்கிறது.இதையொட்டி, நேற்று காலை கலசாபிஷேகம், கொடி மரப்பூஜைகள் நடந்தது. நேற்று (டிச.,21) 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 25ம் தேதி இரவு, 8 மணிக்கு ஸ்வாமி பள்ளி வேட்டை புறப்படுதலும், பள்ளி குறுப்பு பூஜையும் நடக்கிறது. வரும், 26ம் தேதி காலை, 8 மணிக்கு ஸ்வாமி கே.ஆர்.பி., அணை புறப்படுதலும் இதை தொடர்ந்து ஆறாட்டு வரவு, பறை நிரப்புதல், கொடி இறக்குல் நிகழ்ச்சியும், உச்சிகால பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து பகல், 12 மணிக்கு மீனாட்சி மஹால் திருமண மண்டபத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. புத்தாண்டையொட்டி ஜனவரி, 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மண்டல பூஜை நாட்களில் காலை, 5.30 மணிக்கு கேரள பிரதம அர்ச்சகர்மவேலிக்கர புத்தில்லம் பிரம்மஸ்ரீ நாராயணன் நம்பூதிரி குழுவினரால் மஹா கணபதி ஹோமமும், இரவில் பக்தி கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.