வல்லக்கோட்டை முருகனுக்கு 1,008 பால்குட ஊர்வலம்
பதிவு செய்த நாள்
01
செப் 2025 11:09
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 38ம் ஆண்டு ஆடி உத்சவத்தையொட்டி, வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு 1,008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானை யுடன் முருகபெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், 38ம் ஆண்டு ஆடி உத்சவத்தையொட்டி, முருக பெருமானுக்கு 1,008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு வடக்கு மாட வீதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து, 1,008 பால்குடங்களை பெண்கள் மற்றும் இளைஞர்கள், கிழக்கு மாட வீதி, சன்னிதி தெரு வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இதையடுத்து, மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. தொடந்து, செண்பக மலர் அலங்காரத்தில் முருகபெருமான் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.
|