விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சத்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ் வரர் கோவில் மண்டலபிஷேக நிறைவு பூஜை நடந்தது.
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி கும்பாபி ேஷகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று முன்தினம் நிறைவு பூஜை நடந்தது.
அதனையொட்டி, காலை கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 11:40 மணிக்கு கலசம் புறப்பாடாகி பனங்காட்டீஸ்வரர், சத்யாம்பிகை உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தெடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை அறநிலையத் துறை செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் பல்லவி, திருப்பணிக்குழு தலைவர் செல்வநாதன், செயல் தலைவர் அன்புமணி, செயலாளர் ஜோதிராஜா, பொருளாளர் கணேசன் உட்பட கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.