Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹெத்தையம்மன் திருவிழா இன்று கோலாகல ... திருப்பதி திருமலையில் தங்கத் தேர் உற்சவம்! திருப்பதி திருமலையில் தங்கத் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத துறவியாகிறார் 13 வயது சிறுவன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2012
10:12

குல்பர்கா: தாத்தாவுடன் மதகுருவை சந்திக்க சென்ற, 13 வயது சிறுவன், மதகுருவை சந்தித்த உடனேயே, "துறவியாக போகிறேன் என, தெரிவித்து விட்டார். வரும், 1ம் தேதி, அவருக்கு, தீக்ஷை அளிக்கப்பட உள்ளது.கர்நாடக மாநிலம், குல்பர்காவை சேர்ந்தவர் அஸ்வின்குமார் சோராடியா, தொழிலதிபர்; ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு, 13 வயதில், குவாய்ஷ் என்ற மகன் உள்ளார்.ஜெயின் மதத்தினரின், ஸ்வதம்பரர் தேராபந்த் பிரிவை சேர்ந்த இவர், தன் மகனை, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராஜஸ்தான் அனுப்பி வைத்துள்ளார். தாத்தா, அசோக் சேத்தியாவுடன், ராஜஸ்தான் சென்ற குவாய்ஷ், மதகுரு மகாசர்மானுடன் பேசியுள்ளார்.ஏராளமான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்ற சிறுவன் குவாய்ஷ், வெளியே வந்ததும், தான் துறவியாக போவதாக, தாத்தாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அசோக் சேத்தியா, தன் பேரனுடன், குல்பர்கா திரும்பினார். அங்கு வந்த பின்னரும், மத வழிபாடுகளிலும், பூஜைகளிலும் அதிக விருப்பமாக இருந்த சிறுவன், தன்னை துறவியாக மாற்ற உதவுமாறு, பெற்றோரிடம் கேட்டு கொண்டான். இதையடுத்து, சுவாமியை சந்தித்த குவாய்ஷ் குடும்பத்தினர், "13 வயது சிறுவனை துறவியாக்க, மத கோட்பாடுகள் அனுமதிக்கிறதா? என, கேட்டுள்ளனர். "எத்தனை வயதாக இருந்தாலும் பரவாயில்லை, சிறுவனின் விருப்பமே முக்கியம் என, தெரிவித்த, சுவாமி மகாசர்மான், சிறுவன் குவாய்ஷை துறவியாக்க சம்மதித்தார்.எனினும், தொடர்ந்து படிக்க, அவனை அனுமதித்த அவர், துறவியாவதற்கு முந்தைய பயிற்சி அளித்து வருகிறார்.வரும், 1ம் தேதி குவாய்ஷ், ஜெயின் மத துறவியாகிறார். கடைசியாக தன் வீட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்த குவாய்ஷ், தன் உறவினர்களுடன் தங்கியிருந்த போதிலும், தினமும் பூஜை, வழிபாடு செய்ய தவறவில்லை. பாலோதரா என்ற இடத்தில், குவாய்ஷ்சுக்கு, தீக்ஷை வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar