ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2025 04:09
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ரெங்கர் தீர்த்தம் ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. செப். 2 மாலை யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு நடந்த பூஜையில் சடகோபர் ராமானுஜ ஜீயர் பங்கேற்றார். இன்று காலை 7:45 மணிக்கு மேல் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு விமான கலசத்திற்கு கோயில் பட்டர்கள் புனித நீர் ஊற்றினர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ரெங்கநாதர், ஸ்ரீதேவி, பூமாதேவியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு, வனத்துறை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.