கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டாதேவி சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2025 10:09
அரவக்குறிச்சி; கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டாதேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில், காசிபாளையம் மாரியம்மன் கோவில் தென்புறத்தில், பழமை வாய்ந்த ஜேஷ்டாதேவி சிற்பம் இருப்பதாக, நிமித்தம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கொடுத்த தகவல்படி, தொல்லியல் ஆய்வாளர்கள் அர்ச்சுனன், உத்திராடம் ஆகியோர் சிற்பத்தை கண்டறிந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சோழர் காலத்தை சேர்ந்த செவ்வக வடிவ பலகை கல்லில், 4 அடி உயரத்தில் ஜேஷ்டாதேவி புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற பலகை கல்லின் நடுவில் சிற்பம் உள்ளது. இரு கால்களையும் அகட்டி கீழே தொங்கவிட்டு, அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. தேவியின் வலப்புறம் மாட்டு தலையும், இடதுபுறம் மனித உடலும் கொண்ட உருவம் காணப்படுகிறது. இந்த சிற்பம் கி.பி.,10ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது. இவ்வாறு கூறினர்.