இடையர்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2025 03:09
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம், இடையர்குப்பம் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடையர்குப்பம் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 10ம் தேதி காலை கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிர ஹோமம், மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாகவேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.