கோவை; சத்ய சாய் நிறுவனங்கள் சார்பில் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடி நாம அர்ச்சனை கடந்த 04ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் சாய் பஜன் மற்றும் சத்சங் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் காலை 7:00 மணி முதல் 9-00 மணி வரையிலும் காலை 9.30மணி முதல் மதியம் 12.30மணி வரை நடைபெறுகிறது. நிறைவாக மாலை 04-30 மணி முதல் 05.30 மணி வரை சத்ய சாய்பாபாவின் நாமம் பாராயணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அமைப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.