காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி வரதன் திருவடி கைங்கர்ய குழுவினர், நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பெருந்தேவி வரதன் திருவடி கைங்கர்ய குழுவினர் வைணவ கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர். இதில், 100 கால் மண்டபத்தில் உள்ள துாண்கள், சிற்பங்கள், கோவில் உட்பிரகாரம் மற்றும் பல்வேறு சன்னிதிகளில் துாய்மை பணி மேற்கொண்டனர்.