200 மீட்டர் நகர்த்தி வைக்கப்பட்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2025 05:09
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதிகளில், 32 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல்கட்டமாக பெரிய வீதி, மேற்கு கோபுர வீதியில் பணி முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக தேரடி வீதி மற்றும் திருவூடல் வீதியில் பணி நடந்து வருகிறது. வரும் நவ.,23ல் கார்த்திகை தீப திருவிழா தொடங்க உள்ள நிலையில், பூர்வாங்க பணிக்காக பந்தக்கால் நடப்பட்டுள்ளது. இதில் ஏழாம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேரில் வீதியுலா வருவர். இதனால் சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் நடக்கும் சாலையில், சாலை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. இதற்காக மஹா ரதம் என அழைக்கப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதியுலா வரும், 60 அடி உயரம் கொண்ட, 200 டன் தேர், பக்தர்களால் இன்று வடம் பிடிக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.