நவராத்திரி மூன்றாம் நாள்; நந்தினி அலங்காரத்தில் திருவெற்றியூர் வடிவுடையம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2025 10:09
சென்னை; தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோவில் நவராத்திரி விழா மூன்றாம் நாளில் நந்தினி அலங்காரத்தில் வடிவுடையம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் சன்னதியில் நவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாவது நாள் உற்சவத்தை முன்னிட்டு சுவாமி காமதேனு வாகனத்தில் வீற்றிருக்க வைத்து நந்தினி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்த நிலையில் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீதி உலா வந்து அருள் பாலித்தார். முதலில் மங்கள வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு, மஹா தீப ஆராதனை செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். பின்னர் நான்கு மாட வீதியில் நடைபெற்ற் உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி வடிவுடைய நாயகியே என தரிசனம் செய்தனர். முன்னதாக விநாயகர் முன் செல்ல அம்மன் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை வழக்கில் தூக்கி ஊர்வலமாக சென்று கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பின்னர் நான்கு மாத வீதி உலா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த நவராத்திரி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.