மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மணிவிழா ஆண்டையொட்டி குருமகா சந்நிதானம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதோடு 108க்கும் மேற்பட்ட கோயில்களில் ருத்ரஹோம் நடந்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகிறார். வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி விரையில் தருமை ஆதீன வளாகத்தில் மணிவிழா பூர்த்தியையொட்டி சிறப்பு ஹோமம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது. அதனையொட்டி யாகசாலை பூஜை பந்தகால்மூகூர்த்தம் நேற்று நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி கோயிலில் சண்டிஹோமம் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் துர்க்காதேவி கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு மணிவிழா யாகசாலை பூஜைக்கான பந்தகால்மூகூர்த்தம் செய்து வழிபாடு நடத்தி யாகசாலை அமைவிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தர்மபுரீஸ்வரர், ஞானபுரீஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில் மாணிக்கவாசக தம்பிரான், சிவகுருநாத தம்பிரான், சுப்ரமணிய தம்பிரான், ஆதீன பொதுமேலாளர் ரங்கராஜன், கல்லூரி முதல்வர் சாமிநாதன், கல்விக்குழு உறுப்பினர் சிவராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.