பாகூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 01:09
பாகூர்; குடியிருப்புபாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின் 5ம் நாளான நேற்று, ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்தால் அம்மன் அருள்பாலித்தார். பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா மற்றும் அம்பு உற்சவ திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை், இரவு 7:00 மணிக்கு, பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்து வருகிறார். 5ம் நாளான நேற்று ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்தால் அம்மன் அருள்பாலித்தார். இன்று (27ம் தேதி) கஜலட்சுமி, நாளை (28ம் தேதி) ஞானசரஸ்வதி, 29ம் தேதி துர்கையம்மன், 30ம் தேதி மகா சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்க உள்ளார். முக்கிய நிகழ்வான விஜயதசமி அம்பு உற்சவ திருவிழா வரும் 1ம் தேதி நடக்கிறது. அன்றை தினம், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.