கங்கைவராக நதீஸ்வரர் கோவில் ராஜ கோபுரத்தில் மேல் தளம் அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 01:09
வில்லியனுார்; திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் கிழக்கு ராஜ கோபுரத்தின் மேல் தளம் அமைக்கும் பணி நடந்தது.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கு ராஜகோபுர திருப்பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராஜகோபுரத்தின் மேல் தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதில், முன்னாள் திருப்பணி குழு தலைவர் செல்வம் மற்றும் ஊர் பிரமுகர்கள் மோகன், என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சரவணன், தலைமை அர்ச்சகர் சரவணன், சிவாச்சார்யார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.