ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 02:09
ஸ்ரீவில்லிபுத்துார்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி வர உற்ஸவத்தை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதனையடுத்து ராஜா அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். மாலை 4:00 மணிக்கு பெருமாள் கருட சேவை கிரிவலம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. செண்பகத் தோப்பு காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.