புரட்டாசி சனி; பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 04:09
போடி; புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் முத்தங்கி சேவை, உலர் பழங்களுடன் கூடிய அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன. போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.