சூலூர் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 05:09
சூலூர்; சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை பூஜை நடந்தது.
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோவில், கணியூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், கரவழி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், வெங்கிட்டாபுரம் காரண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர். பஜனை பாடல்களை பாடி பக்தர்கள் மகிழ்ந்தனர். அனைவருக்கும் துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.