வடபழனி முருகன் கோவில் சக்தி கொலு; கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2025 11:09
சென்னை; நவராத்திரி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள ‘சக்தி’ கொலுவின் ஏழாம் நாளில், கம்பாநதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு விழா சிறப்பாக துவங்கி வரும் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில், ‘சக்தி கொலு’ எனும் பெயரில் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை வேளைகளில், அம்மன் கொலு மண்டபத்தில், சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளில் அம்பாள் கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கோவில் கொலுவை காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணிவரையும் கண்டு களிக்கலாம்.