Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மூன்றாவது சனி; ... புரட்டாசி மூன்றாம் சனி; ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி மூன்றாம் சனி; ரங்கநாதரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் பூலோகநாதர் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே  நடைபெறும் பூலோகநாதர் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்

பதிவு செய்த நாள்

04 அக்
2025
12:10

தேனி; போடிநாயக்கனூரில் புரட்டாசி மூன்றாவது வார சனிக்கிழமை முன்னிட்டு 250ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே  நடைபெறும் பூலோகநாதர் அலங்காரத்தில் காட்சி அளிக்கும் சீனிவாச பெருமாள் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவில்.  சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஆதிசேஷன் குடை கீழ் அமர்ந்திருக்கும் பூலோகநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்திற்கான பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar