புரட்டாசி மூன்றாவது சனி; கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2025 12:10
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு, கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் உலகச் ஷேமத்திற்காக பட்டாச்சாரியார்களால் அனுமன் மூலமந்திரம் இடைவிடாது பாராயணம் செய்யப்பட்டு, ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. ஸ்ரீராம பக்தனான மூலவர் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவையில் அருள்பாலிக்க, உற்சவர் வெள்ளிக்கவசம் அணிந்து சேவைசாதித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் முத்தங்கி சேவையில் காட்சிதருவார் என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து, ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர்.