கூடல் சுந்தரவேலவர் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2025 04:10
கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 28வது ஆண்டு கந்த சஷ்டி விழா துவங்கியது. அனைத்து திரவியங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். பக்தர்களுக்கு பழச்சாறு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும், 6வது நாள் காலை பால்குடம் எடுத்தலும், சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடைபெறும். 7வது நாள் சுந்தரவேலருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.