Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகன் கோவிலில் நாளை ...  சிங்காரவேலவருக்கு ‘வியர்க்கும் மகிமை’ சிக்கல் கோவிலில் பக்தர்கள் பரவசம் சிங்காரவேலவருக்கு ‘வியர்க்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சூரசம்ஹாரம்: தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...
எழுத்தின் அளவு:
இன்று சூரசம்ஹாரம்: தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...

பதிவு செய்த நாள்

27 அக்
2025
08:10

* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.


* முருகனின் அவதார நோக்கமான சூரசம்ஹாரம் நிறைவேறிய ஊர் திருச்செந்துார்.


* அறுபடை கோயில்களில் பெரியது திருச்செந்துார்.


* திருச்செந்துாரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.


* காவல் தெய்வமாக வீரபாகு உள்ளதால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என பெயருண்டு. வீரபாகுவுக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது.


* பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர்.


* மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் வழிபட்ட பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையின் பெயர் பாம்பறை.

* கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் கட்டுகின்றனர்.


* சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்பர்.


* ராஜ கோபுரம் 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகள் கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.


* திருச்செந்துார் மீது அருணகிரிநாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடினார். இதை பாடினால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.


* திருச்செந்துார் கோயிலின் அமைப்பு பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் உள்ளது.


* சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. இதனை 124 துாண்கள் தாங்குகின்றன.


* 24 அடி ஆழம் கொண்ட நாழிக்கிணறில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும்.


* மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் திருச்செந்துார் கோயில் திருப்பணிக்காக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்தனர். இவர்களின் சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.


* மன்னார் வளைகுடாவின் கரை ஓரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால் அலைவாய் எனப்பட்டது.


* கோயிலுக்குச் செல்லும் வழியில் துாண்டுகை விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிய

பின் முருகனை வணங்க வேண்டும்.


* மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை வேல் பிளவுபடுத்திய இடம் திருச்செந்துாரில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள மாப்பாடு(மாமரத்தை பிளந்ததால்). அது தற்போது மணப்பாடாகி மாறியது.



* மூடிய ராஜகோபுரம் சூரசம்ஹாரம் முடிந்த, மறுநாளில் நடக்கும் தெய்வானை திருமணத்தின் போது திறக்கப்படும்.


* அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனத்தை (நிர்மால்ய பூஜை) பார்ப்பது விசேஷம்.

* கால அடிப்படையில்


ஆதிசங்கரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பகழிக் கூத்தர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட பல அடியார்கள் திருச்செந்துாரானின் அருள் பெற்றவர்கள்.


* செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என பெயருண்டு.


* வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி ஜக்கம்மாவும் தங்க நகைகளை முருகப்பெருமானுக்கு காணிக்கை அளித்தனர்.


* திருச்செந்துாரில் உச்சிக்கால பூஜை முடிந்து மணி ஒலித்த பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவார். அதற்காக 100 கிலோ எடை கொண்ட மணியை ஒலிக்கச் செய்தார். ராஜகோபுரம் 9ம் அறையில் இது உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar