Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறுபடை வீடு முருகன் கோவிலில் ... பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 அக்
2025
12:10

பெசன்ட் நகர்: அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 31ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. அங்கு தினசரி, உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்து, அதிகளவில் மக்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இக்கோவில் கட்டட கலையில் சிறப்பு அம்சம் பொருந்திய, அஷ்டாங்க விமானத்தில் அமைந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மகாசம்ப்ரோஷணம் நடந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்., 15ம் தேதி திருப்பணி துவக்கப்பட்டது. இதில், அஷ்டாங்க விமானம், சன்னிதிகள் மற்றும் இதர இடங்களை பழுது பார்த்து புதுப்பித்து, வர்ணம் பூசும் பணி மற்றும் கோவில் தரைதளம் அமைத்தல், மின் இணைப்பு பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி, மடப்பள்ளி, அன்னதானம் கூடம் சீரமைப்பு ஆகிய திருப்பணிகள், 2 கோடி ரூபாயில் உபயதாரர்கள் வாயிலாக நடந்தன. தற்போது, திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 31ம் தேதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்காக, யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகின்றன. கும்பாபிஷேக நாளான வரும் 31ம் தேதி காலை 8:30 மணி முதல் மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கலச புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள், அனைத்து சன்னிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்று மாலை 5:30 மணிக்கு, திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar