Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் ... சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம் சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் விஜயம்
எழுத்தின் அளவு:
அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் விஜயம்

பதிவு செய்த நாள்

27 அக்
2025
12:10

சென்னை: அறுபடை வீடு முருகன் கோவிலில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


பெசன்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று விஜயம் தந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


தொடர்ந்து, அவர் பேசியதாவது: திருச்செந்துார், ராமேஸ்வரம் கோவில் போல், இந்த அறுபடை வீடு முருகன் கோவிலும், கடற்கரையை ஒட்டி உள்ளது.  இந்த கோவில் காஞ்சி பெரியவருடைய ஆசியுடன், எம்.ஜி.ஆர்., காலத்தில் 31 கிரவுண்ட் இடம் கிடைக்கப்பெற்று, அதில் 21 கிரவுண்ட் இடத்தில் கருங்கல்லில் கோவில் கட்டமைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதற்கு நிதி, நிர்வாகம் முக்கியம். அதையும் சிறப்பாக செய்கின்றனர். நம் நாட்டில், விஞ்ஞானம், பொருளாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு வளர வேண்டும் என்பது நமது தேவையாக இருந்தாலும், அடிப்படையில் நல்ல மனிதர்களை உருவாக்குவது முக்கியம். இதற்கு தெய்வ பக்தி தேவை. பாராயணம், தெய்வத்தின் குரலை படிப்பது, பிடி அரசி திட்டத்தை செயல்படுத்துவது, ஹோமம் நடத்துவது போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை, அடுத்த தலைமுறையிடம் எடுத்து செல்ல வேண்டும். கோவில்களை ஆன்மிக கல்வி நிலையங்களாக, தியாக மனப்பான்மையை வளர்க்க கூடிய இடமாக மாற்ற வேண்டும். மக்களிடம் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியமான சிந்தனை ஏற்பட கூடிய இடமாக, கோவில்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருவான்மியூர், அஷ்டலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்காக நடைபெற்ற கணபதி ஹோமத்தில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar