உலகமெங்கிலுமுள்ள மக்கள் கணபதியை வழிபடுகிறார்கள். நாடும் மொழியும் மாறும்போது அவரது நாமமும் மாறிவிடுகிறது. பர்மாவில் மகாபினி என்ற பெயரில் அவரை வழிபடுகிறார்கள். மங்கோலியாவில் தோட்கர் என்றும் கம்போடியாவில் பிரஸ கணேஷ் என்றும் சீனாவில் க்வான் ஷடியிக் என்றும் ஜப்பானில் வினாயக் ஷா என்றும் வெவ்வேறு பெயர்களில் விநாயகர் வழிபடப்படுகிறார்.