அசநல்லிபாளையம் ஏரி கருப்பராயசாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 11:11
அவிநாசி; சேவூர் அடுத்த அசநல்லி பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஏரி கருப்பராயசாமி கோவிலில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
சேவூர் அருகே வேட்டுவபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அசநல்லி பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஏரி கருப்பராயசாமி கோவிலில் கும்பாபிஷேக பெருவிழா, நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால வேள்விப் பூஜையுடன் விமானங்கள், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், ஏரி கருப்பராயசாமி, கன்னிமார், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.