இலுப்பப்பட்டு: காஞ்சிபுரம் அடுத்த இலுப்பப்பட்டு சந்திரமவுலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த இலுப்பப்பட்டு கிராமத்தில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் புனரமைப்பு பணியாக பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. கடந்த 30ம் தேதி காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை, 9:00 மணிக்கு ஐந்தாம் கால ஹோமமும், கலச புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.