போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்று விமான பாலாலய பூஜை நடந்தது.
போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் சுவாமி கோயில் அமைந்து உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனை முன்னிட்டு கோயில் புனரமைப்பு பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு உண்டான பணிகள் துவங்க உள்ளன. இன்று கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் கோயில் விமான பாலாலய பூஜைகள் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. இக்கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதால் இன்று யாகசாலை பூஜைகளுடன் விமான பாலாலய பூஜை நடந்தது. இதனை ஒட்டி கோயில் ராஜ கோபுரம், சிலைகளுக்கு வர்ணம் பூசுதல், பெயிண்டிங் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது.