தஞ்சை வீரநரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்; வரும் 11ம் தேதி கோலாகலம்
பதிவு செய்த நாள்
04
நவ 2025 03:11
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட தஞ்சை நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ வீரநரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருளுகிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. தஞ்சை மாமணிகோயில்" என்று புகழப்பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோவிலில் புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகின்ற விசுவாவசு வருஷம் ஐப்பசி 24-ம் தேதி (10.11.2025) திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் ஜீர்ணோத்தாரண. புனரஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷண வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு வரும் 8 ம்தேதி சனிக்கிழமை மாலை 5.00 முதல் இரவு 8.30 வரை ஆசார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, புண்யாகவாசனம், எஜமானர் சங்கல்பம், மருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம். அக்னி பிரதிஷ்டைகலாகர்ஷணம் கும்ப ஆவாஹனம் கும்ப பிரதிஷ்டை ரக்ஷா பந்தனம் ததுக்த ஹோமம் பூர்ணாஹுதி, விசேஷ பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது. 9 ம்தேதி தேதி புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், ததுக்த ஹோமம், மகாசாந்தி ஹோமம், புண்யாகவாசனம், மயாசாந்தி ஹோமம், அஷிமோசனம், கோ உற்சவர் திருமஞ்சனம். சயனாதிவாசம். ஹாத்ரம், சர்வ தவார்ச்சனம். அதுக்த ஹோமம், மூலமந்த்ர ஹோமம் பூர்ணாஹுதி, விசேஷ பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 10ம் தேதி காலை சுப்ரபாதம், புண்யாகனாசனம், ததுக்கு ஹோமம், பூர்வா யாத்ராதானம் நடைபெற்று, கடம் புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து ,காலை 9:30 மஹா சம்ப்ரோக்ஷணம் சிற்பபாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
|