Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: சந்தோஷம் தான் அனுபவிக்க ... சிம்மம்: ஆண்டு முழுவதும்  அதிர்ஷ்டக்காற்று! சிம்மம்: ஆண்டு முழுவதும் ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
கடகம்: குரு பார்க்கிறார்..கோடியைத் தருகிறார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
03:12

கருணை மனதுடன் பிறருக்கு உதவுகின்ற கடகராசி அன்பர்களே!

புத்தாண்டில் சனி, ராகு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திலும் கேது பத்தாம் இடத்திலும் உள்ளனர். இந்த அமர்வு வருடம் முழுவதும் சுமாரான பலன்களை தரும் வகையில் உள்ளது. இருப்பினும் குருபகவான் மே 28 வரை ஆதாய ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்வு சிறக்க நற்பலன்களை வழங்குவார். பின், மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிற குரு, அர்த்தாஷ்டமச்சனியாக அமர்ந்துள்ள சனிபகவானை ஐந்தாம் பார்வையால் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. இதனால் சனி, ராகு வின்அமர்வினால் உருவாகிற சிரமம் குறைந்து வாழ்வு வளம் பெறும். இடம், சூழ்நிலை உணர்ந்து இனிமையாகப் பேசுவீர்கள். சமூகத்தில் நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். தம்பி, தங்கைகள் சொல்கிற ஆலோசனை உங்கள் சிந்தனையில் புதிய உற்சாகத்தை உருவாக்கும். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு நடைமுறையும்வாகன பயணத்தில்மிதவேகமும் பின்பற்றுவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்களிடம் தேவையற்ற பழைய விஷயம் குறித்த விவாதம் கூடாது. புத்திரர்கள் மே28ல் நிகழ உள்ள குரு பெயர்ச்சி வரை படிப்பு, சுயதிறமையில் நல்ல முன்னேற்றம் அடைவர். அவர்களைப் பாராட்டி பரிசுப்பொருள் வாங்கித்தருவீர்கள்.ஆண்டின் பிற்பகுதியில் புத்திரர்கள் ஆடம்பர எண்ணத்துடன் ஊர் சுற்றுவதில் விருப்பம் கொள்வர். கடமைகளின் முக்கியத்துவம் உணர்த்தி, அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம். கடன், பிணி, எதிரி ஸ்தானம் ஆகிய ஆறாம் இடத்தை குரு, சனி, ராகு பார்ப்பதால் எதிரிகளால் வருகிற தொல்லை பெருமளவில் குறையும். உடல்நலம் சீராகும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற வங்கிக்கடன் வாங்குவீர்கள்.வெளியூர் பயணம் அவ்வப்போது அவசரகதியில் செல்ல நேரிடும். பயணத்தின்போது விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்பட்டு குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவர். நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.தொழில் சார்ந்த வகையில் திட்டமிட்ட முன்னேற்ற இலக்கை அடைய விடாமுயற்சி தேவைப்படும். பணவரவு சீராகக் கிடைத்து குடும்பத் தேவை நிறைவேறும். சிக்கனமாக இருந்தால் கடன் வாங்கும் தேவையை தவிர்க்க முடியும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி குரு பெயர்ச்சிக்கு முன் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மூத்த சகோதரர்கள் உங்கள் வாழ்வு வளம் பெறத் தேவையான ஆலோசனைகளை வழங்குவர். வெளிநாடு வேலைவாய்ப்பு பெறுவதில் இருந்த தடை அனைத்தும் நீங்கும்.

தொழிலதிபர்கள்:  கடின முயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி தரம் மற்றும் நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடிப்பீர்கள். அவர்களுக்கு தாராள சலுகைகளை வழங்குவீர்கள். தொழிற்சாலை பாதுகாப்பில் உரிய கவனம் கொள்வது நல்லது. உங்களுக்கு அனுபவம் இல்லாத தொழிலில் கூட்டுசேர நண்பர்கள் வற்புறுத்த வாய்ப்புண்டு, கவனம்.

வியாபாரிகள்:  மூலதனத்தை அதிகப்படுத்தி பொருட்களை பெருமளவில் கொள்முதல் செய்வீர்கள். போட்டியைச் சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். விற்பனை சீராகி ஆதாயம் கூடும். சரக்கு வாகன பராமரிப்புச்செலவு அதிகரிக்கும். அனுபவம் மிக்க வியாபாரிகளின் ஆலோ சனைகளை அவ்வப்போது கேட்டு நடைமுறைப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வீர்கள்.

பணியாளர்கள்:  அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் விழிப்புடன் செயல்பட்டு பணியில் குறைபாடு வராத அளவில் செயல்படுவர். சில சமயங்களில் பணித்திறமையால் நிர்வாகத்தினரின் பாராட்டும் கிடைக்கும். சக பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நட்புணர்வு பலமாகும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையில் கவனம் கொள்வது அவசியம். பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானம் அதிகரிக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். குடும்ப பெண்கள் கணவரின்வருமானம்அறிந்து அதற்கேற்ப செயல்படுவர். தாய்வழி உறவினர்களிடம் உதவிகள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள்  புதியஆர்டர் கிடைத்து வருமானத்தை உயர்த்துவர்.
 
மாணவர்கள்: விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே திட்டமிட்ட இலக்கை அடைய இயலும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். பயணத்தில் நிதான நடைமுறை அவசியம். படிப்புக்கான பணவசதி சீராகக் கிடைக்கும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு பொறுமை தேவைப்படும். 

அரசியல்வாதிகள்:  ஆதரவாளர்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்கவைக்க தாராள செலவு செய்வீர்கள். மே 28ல் குரு பெயர்ச்சியான பின் எதிரிகளின் மனதில் உங்கள்மீது நல்ல அபிப்பிராயம் உருவாகி பகைமை உணர்வு குறையும்.

விவசாயிகள்:  வருட முற்பகுதியில் தாராள அளவில் விளைச்சல் பெற்று சந்தையில் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறுவர். கால்நடை வளர்ப்பிலும், பயிர் பாதுகாப்பிலும் கவனம் கொள்வது நல்லது.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் நன்மைகள் மேலோங்கும்

பரிகாரப் பாடல்:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போதவாங்கு
அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப்
பிறையெயிற்று அனல் விழி பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்
திருவல்லிக்கேணி கண்டேனே!

ஜனவரி: சனி,ராகுவின் சஞ்சாரத்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். புதன், சுக்கிரனும் சுமாரான பலனையே வழங்குவர். நண்பர், உறவினர் உதவ எண்ணினாலும் எதிரிகள் அதனை தடுப்பர். குருபலத்தால் சனி,ராகு தரும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.

பிப்ரவரி: செவ்வாயும், சனியும் 8ல் சஞ்சரிப்பதால் சற்று சிரமம் தான். குருவைத் தவிர யாராலும் நன்மை இல்லை என்ற நிலை தொடர்கிறது. வாகனப்பயணத்தில் கவனம் தேவைப்படும். உடல்நலனிலும் அக்கறை தேவைப்படும்.

மார்ச்: புதனும், சுக்கிரனும் அனுகூலம் தர காத்திருக்கின்றனர். குருவின் அருளால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். படித்து வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலகட்டம் இது. வீடு கட்ட முயற்சிப்பவர்கள் பணியைத் தொடங்கும் நல்ல சூழல் உருவாகும்.

ஏப்ரல்: சனியின் பார்வையால் மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் கவனம் அவசியம். சிலருக்கு தொழில்மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வெளிநாடு சென்று வரும் யோகமுண்டு. விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது நல்லது.

மே: கூட்டுத்தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். சகோதரர்களால் நன்மை பல உண்டாகும். பதவி உயர்வு, விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. வியாதி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.  பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

ஜூன்: 12ல் இருக்கும் குருவால் சோதனை உருவாகும். கடன் வாங்க நேரிடும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் அக்கறை தேவைப்படும். திருத்தல தரிசனம் சென்று வர வாய்ப்புண்டு. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது நல்லது.

ஜூலை: பொருள்விரயம் ஏற்படும். விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு போகும். நம்பிக்கையானவர்களே உங்களை வஞ்சிக்க இடமுண்டு. உறவினர்களின் செயல் அதிருப்தி அளிக்கும். கண்கோளாறு உருவாகும். அர” விஷயத்தில் விழிப்புணர்வு அவசியம்.

ஆகஸ்ட்: புதன், சுக்கிரன் அருளால் வருமானம் உயரும். ஆரோக்கியம் சீராகும். ஜென்மத்தில் இருக்கும் செவ்வாயால் உடலில் உஷ்ணம் கூடும். முன்கோபத்தால் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். உறவினர்களின் செயலால் கோபத்திற்கு உள்ளாவீர்கள்.

செப்டம்பர்: சூரியன் 3ல் சஞ்சாரம் செய்வதால் நன்மை அதிகரிக்கும். நல்லவர்களின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு. அரசு வேலை கிடைக்கும் யோகமுண்டு.

அக்டோபர்: வருமானம் சீராக இருக்கும். நான்காம் இட சூரியனால் உடல்நிலையில் மந்தம் தென்படும். தந்தை மகன் உறவு பாதிக்க வாய்ப்புண்டு. சகோதரர்களின் நிலையும் சுமாராகவே இருக்கும். எதிர்பாராத பிரச்னைகளையும் சந்திக்கலாம் கவனம்.

நவம்பர்: குரு வக்ரம் அடைவதால் நிலைமை சீராகும். செவ்வாயின் மூன்றாம் இட மாற்றத்தால் நற்பலன் உண்டாகும். திருமண முயற்சிகளில் அனுகூலமுண்டு. பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் காலகட்டம். நீண்டகால கடன் அடைபடும்.

டிசம்பர்: சூரியன், வக்ரகுரு, செவ்வாய் மூன்றாலும் நற்பலன் உண்டாகும். விரும்பிய படி ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தொழிலில் பன்மடங்கு லாபம் உயரும். மறைமுக எதிரிகளால் இருந்த தொந்தரவு பெருமளவு குறையும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar