சுசீந்திரம் தாணுமாலையர் கோயில் தெப்பம் சுவர் இடிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2025 08:11
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையர் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் பக்கவாட்டுச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இத்தெப்பக்குளம் ரூ.35 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குளத்திலிருந்து அதிகளவு மண் அள்ளப்பட்டதால்தான் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.