Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகை பிடித்துள்ள நோய்களுக்கு தீர்வு ... புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் சத்திய நாராயண விரதம்; ரதோத்சவம் கோலாகலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
ஸ்ரீசத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: நாளை சிறப்பு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
ஸ்ரீசத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: நாளை சிறப்பு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

18 நவ
2025
07:11

புட்டபர்த்தி: ஸ்ரீசத்யசாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புட்டபர்த்தியில் நாளை (நவ.,19) நடக்கும் விழாவில், சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

ஸ்ரீசத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்கள் ஆகி வருகின்றனர்; பல்வேறு சேவைகளையும் செய்து வருகின்றனர்.

ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி வரை, புட்டபர்த்தியில் கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்களில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

நாளை(நவ.,19) நடைபெறும் விழாவில் ஸ்ரீசத்யசாய்பாபா நினைவு தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். 
22ம் தேதி சத்யசாய் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். 

100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும்.மறுபக்கத்தில் சத்ய சாய்பாபாவின் உருவம் பொறிக்கப்பட்டு, 1926 -- 2026 என்றும், சத்ய சாய்பாபாவின் ஜென்ம சதாப்தி என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம், சாய் குல்வந்த் ஹாலில் சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: “ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் போதனைகளும், சேவையும் உலகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கானவர்களை ... மேலும்
 
temple news
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் ... மேலும்
 
temple news
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து, ஆந்திரா மாநிலம், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar