மரக்காணம் வெங்கட்ராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2025 05:11
மரக்காணம்: ஆலத்துார் ஸ்ரீ வெங்கட்ராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மரக்காணம் அடுத்த ஆலத்துார் வேட்டை ஸ்ரீ வெங்கட்ராய பெருமாள் மற்றும் கோதண்ட ராமர் கோவில்கள் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 25 தேதி காப்பு கட்டுதல் கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வரர் பூஜை, இரண்டாம் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றது. இன்று காலை 9:00 மணிக்கு பூரண தீப ஆராதனை நிகழ்ச்சிகளுடன் யாகசாலையில் இருந்த கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஆலத்துார், மரக்காணம், புதுச்சேரி, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து அறநிலத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன், மரக்காணம் சேர்மன் தயாளன் உள்பட பலர் பங்கேற்றனர்.