உலகிலேயே பெரிய வாகனமான வெள்ளி ரிஷபத்தில் வீதி உலா வந்த அண்ணாமலையார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2025 12:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் 5ஆம் விழாவில் உலகிலேயே பெரிய வாகனமான வெள்ளிப்பெரிய ரிஷபத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கோவிலில் இருந்து மாட வீதி நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிலையை வந்து அடைந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவில், நேற்று ஐந்தாம் நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதை தொடர்ந்து காலையில், மூஷிக வாகனத்தில் விநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் (உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம் ) வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிலையை வந்து அடைந்தார்.ஆயிரக்கணக்கானோர் சுவாமிகளை வழிபட்டனர்.