கோவில்பாளையம் அருகே, 160 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாமக்குளம் ஏரி உள்ளது. அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், கடந்த நான்கு ஆண்டுகளாக, கரையை பலப்படுத்துதல், மழைநீர் வரும் பாதையை சீரமைத்தல், மதகுகளை பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல், பறவை தீவு அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் குளத்தில் பெரும்பகுதி தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, ஏரிக் கரையில் தீபம் ஏற்றி தன்னார்வலர்கள் இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1,200 அடி ஆழம் தோண்டிய பிறகே இங்கு நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது வெறும் 10 அடி ஆழத்திலேயே தண்ணீர் வருகிறது. விவசாய பரப்பு அதிகரித்துள்ளது. இதற்காக இயற்கைக்கு நன்றி தெரிவித்து தீபம் ஏற்றினோம், என்றனர். தீப வழிபாட்டில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.