உளுநதுார்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை ஒட்டி கடந்த 6ம் தேதி மாலை 5 மணி அளவில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம், அனுக்ஜை ஆசாரய் வர்ணம், மகாபூர்ணாஹீதி நடந்தது. நேற்று காலை 7 மணி அளவில் புண்யாகவாசனம், யாகசாலை பூஜை, ஹோமம், சாற்று முறை, மாலை 5 மணியளவில் பிம்பசுத்தி, வேத கோஷ மகா சாந்தி ஹோமம், யாகசாலை ஹோமம் நடந்தது. இன்று காலை 6 மணியளவில் விஸ்வரூபம். சுப்ரபாதம், ஹோமம் ஆரம்பம். காலை 9 மணியளவில் மகா பூர்ணாஹீதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அப்போது தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ரூபாய் 4 லட்சத்து 25 ஆயிரம் பணம் கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.