அன்னை சாரதா தேவியின், 173 வது ஜெயந்தி விழா, சூலூர் அடுத்த பள்ள பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் நடந்தது. காலை, 5:00 மணிக்கு மக்கள ஆரத்தியுடன் விழா துவங்கியது. 10:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, ஸ்ரீ சாரதா தேவி அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஆரத்தி நடந்தது. நாம சங்கீர்த்தனத்துடன் அன்னையின் திருவுருவ படம் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. ஆசிரம மாணவர்களின் பஜனை நடந்தது. ஆறுபடையப்பன் அறக்கட்டளை அறங்காவலர் ஷர்மிளா ராம் ஆனந்த், பாரதீய பெண்மணிகள் என்ற தலைப்பில், நம் தேசத்தில் மாபெரும் சக்திகளாகவும், சரித்திரத்தை மாற்றி எழுதிய பெண்மணிகள் குறித்து பேசினார். தருமபுரி ஸ்ரீ சதாசிவானந்த ஆசிரமத்தை சேர்ந்த சதாசிவானந்த சரஸ்வதி சுவாமி பேசுகையில்," அன்னை சாரதா தேவி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை பொழிந்தார். அதேபோல், நாமும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தினால், அது பலமடங்காக நமக்கு திரும்ப கிடைக்கும்," என்ற்ர். தொடர்ந்து மங்கள ஆரத்தி முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆசிரம நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.