திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீஅய்யப்ப சுவாமிக்கு நேற்று, பவானி கூடுதுறையில் ஆராட்டு உற்சவமும்; மாலையில், செண்டைமேளம், வாணவேடிக்கையுடன் திருப்பூரில் தேரோட்டமும் நடந்தது.
திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், 66ம் ஆண்டு மண்டல பூஜை விழா, 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், மகா ேஹாமம், பகவதி சேவை, நவகலச பூஜை, பறையெடுப்பு போன்ற வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று காலை, அய்யப்ப சுவாமி ஆராட்டு உற்சவத்துக்காக, பவானி புறப்பட்டார்; பவானி கூடுதுறையில், சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில், காவிரி ஆற்றில் ஆராட்டு உற்சவம் நடந்தது. தொடர்ந்து, படித்துறையில் அமைந்திருந்த பச்சை பந்தலில், சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது. நெய், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், பன்னீர், விபூதி அபி ேஷகமும், ஆராட்டு உற்சவமும் நடந்தது. அன்னதானம் நடந்தது. தேரோட்டம ் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் வந்தடைந்த அய்யப்ப சுவாமிக்கு, மாலையில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அய்யப்ப சுவாமி, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலுக்கு சென்று அருள்பாலித்தார். ஊர்வலத்தின் போது, கேரள செண்டை மேளம், மேள தாளம், வாண வேடிக்கை, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஏராளமான அய்யப்ப பக்தர்கள், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என கோஷமிட்டபடி, ஊர்வலத்தில் பங்கேற்றனர்.