பதிவு செய்த நாள்
02
ஜன
2013
10:01
சிவகங்கை : புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம், திருப்பலி நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு, சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத்தில், நேற்று அதிகாலை 12 மணிக்கு,சிறப்பு திருப்பலி நடந்தது. சிவகங்கையில் உள்ள விஸ்வநாதசுவாமி, கவுரி விநாயகர், பிள்ளைவயல் காளியம்மன், சுந்தரராஜ பெருமாள், ஆனந்த விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். *பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், நேற்று காலை முதல்,ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை நடை திறக்கப்பட்டு, திருவனந்தாள்,திருப்பள்ளி எழுச்சியுடன் பூஜைகள் துவங்கின.பக்தர்கள் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய,உற்சவரையும், தங்க கவசத்தில் அருள்பாலித்த,கற்பக விநாயகரையும் தரிசனம் செய்தனர்.மதியம் உச்சிகால பூஜையில், சுவாமிக்கு பலவித திரவியங்களால், சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது.மாலையில் சதுர்த்தியை முன்னிட்டு,உற்சவர் மூஷிக வாகனத்தில் பிரகார வலம் வந்தார்.பூஜையை தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் ,சோமசுந்தரம் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்தனர். ஏற்பாட்டினை கோயில் அறங்காவலர்கள் வலையபட்டி ஏ.ராமனாதன், காரைக்குடி எம்.கண்ணன் செய்திருந்தனர்.
*காளையார்கோவில் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புனித அருளானந்தர் ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி , சூசையப்பட்டிணம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பாதிரியார் எட்வின்ராயன் தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆண்டிச்சிஊரணி புனித அடைக்கலமாதா ஆலயத்தில் பாதிரியார் கிறிஸ்டி தலைமையில் சிறப்பு திருப்பலி,பள்ளித்தம்மம் புனித மூன்று ராஜாக்கள் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
*இளையான்குடி உலக ரட்சகர் ஆலயம் , குண்டுகுளம் திருஇருதய ஆண்டவர் ஆலயம் , சாத்தமங்கலம் சகாயமாதா ஆலயம் , சாலைக்கிராமம் தூய மரியன்னை ஆலயம் , சூராணம் புனித சந்தியாகப்பர் ஆலயம் , கல்லடிதிடல் புனித அந்தோணியார் ஆலயம் , கொம்படி மதுரை புனித சவேரியார் ஆலயம் உள்பட இளையான்குடி பகுதிகளில் உள்ள கிறிஸ் தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ,பூஜை நடந்தது. அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில் , ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் , ருக்மணி சமேத மதன வேணுகோபாலப் பெருமாள் , சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில் உள்பட முக்கிய கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
*தேவகோட்டை சகாய அன்னை சர்ச்சில் பாதிரியார் மரிய ஆசிர்வாதம், உலகமீட்பர் சர்ச்சில் பாதிரியார் சந்தியாகு, சி.எஸ்.ஐ. சர்ச்சில் பாஸ்டர் துதியோன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. புவனேஸ்வரி அம்மன் கோயில், காமாட்சிஅம்மன் கோயில், நகர சிவன் கோயில், கைலாசநாதர் கோயில் , மலைக்கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது, ரங்கநாத பெருமாள் கோயில் சிறப்பு பூஜைகளும், திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரமும் செய்விக்கப்பட்டு மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது.