நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருவிழா: உப்பு வைத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2025 10:12
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஐந்தாம் சோமவாரத்தில் இருந்து மூன்று நாட்கள் தேரோட்ட விழா நடப்பது வழக்கம். இந்தக் கோவில் தனியாருக்கு சொந்தமானதால் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை இந்த கோவிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது. இதை எதிர்த்து சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் கடந்த 2009ம் ஆண்டு முதல் தற்போது வரை மூன்று நாட்கள் தேரோட்ட விழாவின் போது கோவிலின் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். பூட்டிய கதவின் முன்பு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை விளக்கேற்றியும், உப்பு வைத்தும் வழிபாடு செய்து செல்கின்றனர். கோவில் முன்பு உப்பு வைத்து கற்பூரம் ஏற்றி சுவாமியை வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது அய்தீகமாக உள்ளது. திருவிழா நிகழ்ச்சியையொட்டி குழந்தைகளை கவரும் வகையில் பொம்மை கடைகள், இனிப்பு மற்றும் மிட்டாய் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், ராட்டினம் மற்றும் இதர விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.