பழநி முருகன் கோவிலில் மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜை; ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2025 10:12
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு நடைபெற்று பூஜைகள் துவங்கும். நேற்று விசுவாவசு ஆண்டு மார்கழி மாதம் துவங்கியதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.