மார்கழி வழிபாடு; குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2025 10:12
குன்றத்துார்: குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும். நேற்று, மார்கழி மாதம் முதல் செவ்வாய் என்பதால், மூலவர், உத்சவர் முருகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழக்கத்தை விட அதிக அளவில் வந்திருந்த பக்தர்கள், நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், குன்றத்துார் அடுத்த மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலிலும், நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.