வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2025 12:12
வேலூர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை 11.20 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்தார். தங்கக் கோயில் வளாகத்தில் குடியரசுத் தலைவர் முர்முவை ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற குடியரசுத் தலைவருக்கு சிறப்பு வரவேற்பு மற்றும் மரியாதை செய்யப்பட்டது. கோவிலில் உள்ள அனைத்து சன்னிதிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். அம்மனுக்கு ஆரத்தி செய்து வழிபட்டார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, ஸ்ரீபுரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு கட்டுப்பட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, புதன்கிழமை மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் 2 அடுக்கு பாதுகாப்புடன் ஸ்ரீபுரம் பகுதி முழுவதும் சுமார் 1000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.