உளுந்துார்பேட்டை ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோவிலில் கோ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2025 11:12
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை ஆதி கேசவ பெருமாள் கோவிலில் மார்கழி 1ம் தேதியொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
உளுந்துார்பேட்டை ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஆதி கேசவ பெருமாள் கோவிலில் மார்கழி 1ம் தேதியொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. நேற்று காலை 4.30 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. அப்போது கோ பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.