Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா ... மலையாண்டவர் கோவிலில் உற்சவர் சிலை பிரதிஷ்டை வழிபாடு மலையாண்டவர் கோவிலில் உற்சவர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா; ஒரு லட்சத்து எட்டு வடை மாலை ரெடி
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா; ஒரு லட்சத்து எட்டு வடை மாலை ரெடி

பதிவு செய்த நாள்

18 டிச
2025
04:12

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் நாளை (19ம் தேதி) தங்க கவசம் சார்த்திக்கொண்டு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவிருக்கிறார்.இதற்கான கடந்த ஒரு வாரகாலமாக தயார் செய்யப்பட்ட வடைகள் மாலைகளாக கோர்க்கப்படும் வேலை நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.


தமிழகத்தின் நாமக்கல் நகரின் மையத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டைக்கு மேற்கே, 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் சிலை 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கருதப்படுகிறது. இவர் இடுப்பில் வாளுடனும், சாளக்கிராம மாலையுடனும் காட்சியளிக்கிறார். கூரையோ, கோபுரமோ இன்றி வெட்டவெளியில் நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் இவருக்கு, இந்த ஆண்டு டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று அனுமன் ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.


இராமாயண காலத்தில், சஞ்சீவி மலையை எடுத்துச் சென்ற ஆஞ்சநேயர், திரும்புகையில் ஒரு பெரிய சாளக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்து வந்தார். வழியில் சூரியன் உதயமானதால், சந்தியாவந்தனம் செய்யக் கருதி அந்தச் சாளக்கிராமத்தைக் கீழே வைத்தார். ஆனால், பூசை முடிந்து திரும்பியபோது அதைத் தூக்க முடியவில்லை. அப்போது, இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை முடித்துவிட்டுப் பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என ஒரு வான் ஒலி கேட்டது. அதன்படி, இராமனுக்கு துணையாக போர் முடித்து மீண்டும் ஆஞ்சநேயர் வந்தபோது, அந்தச் சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நின்றது. அது கண்டு வியந்து வணங்கிய ஆஞ்சநேயர் அந்த தளத்திலேயே நரசிம்மரை வணங்கியவாறு நின்றுவிட்டார் நின்ற அதே கோலத்திலேயே ஆஞ்சநேயர் இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தி விழாவின் மிக முக்கிய ஈர்ப்பு 1,00,008 வடைகள் கொண்ட பிரம்மாண்ட மாலை ஆகும். இந்தப் பணிக்காகச் சுமார் 40 சமையல் கலைஞர்கள் கடந்த ஓரு வாரகாலமாக வடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் தயரான வடைகளை மாலையாக கோர்க்கும் பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. 2.5 டன் உளுத்தம் பருப்பு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு மற்றும் 700 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய் கொண்டு தயார் செய்யப்பட்ட வடைகள் ஒரு துளி நீர் கூட சேர்க்காமல் மாவு பிசைந்து சுடப்படுகிறது இதன் காரணமாக இந்த வடைகள் நீண்ட காலத்திற்கு அதன் மொறுமொறுப்பும் சுவையும் குறையாமல் இருக்கும். அனுமன் ஜெயந்தியான நாளை காலை அதிகாலை 5 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும். இந்த மாலை மதியம் வரை ஆஞ்சநேயர் கழுத்தை அலங்கரிக்கும். மதியம் 1 மணி அளவில் வடை மாலை இறக்கப்பட்ட பின் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். சுவாமிக்குச் சாற்றப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.  இந்த ஒரு லட்சம் வடை மாலை தயாரிப்பு முழுக்க முழுக்க பக்தர்களின் உபயம் மூலம் நடைபெறுகிறது. சாதாரண நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்காக 2,000 வடைகள் கொண்ட மாலைகள் சாற்றப்படுகின்றன. பழமையும் புதுமையும் வாய்ந்த இந்தத் தலம், ஆன்மீக மறுமலர்ச்சியின் அடையாளமாக விளங்குவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாகவும் திகழ்கிறது.ஜெயந்தி அன்று அனுமனை தரிசிக்கவும் பிரசாதமாக வடை பெற்றுக்கொள்ளவும் இப்போது முதலே பக்தர்கள் தயராகிவருகின்றனர். -எல்.முருகராஜ்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar