Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வி.மேட்டுப்பட்டி கதிர் ... வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி அமாவாசை யாகம் வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டிபட்டியில் அனுமன் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டிபட்டியில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

19 டிச
2025
04:12

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பகுதியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.


ஜம்பலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு 11 வகை அபிஷேகம் வடை மாலை சாத்தி வழிபட்டனர். பூரண கும்பத்துடன் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோயிலில் நடந்த அன்னதானத்தை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதா தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.  சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம் பூஜைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் அணிந்த ஆஞ்சநேயர் சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், இனிப்பு வகைகள், வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா குழு சார்பில் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar