கோவை ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கத்தில் கலபாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2025 11:12
கோவை: கோவை, ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கத்தின் 75வது ஆண்டு பூஜா பகவத் சம நிகழ்ச்சிகள் நாளை 24ம் தேதி துவங்குகிறது.இந்த நிகழ்வானது வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. வருடம் தோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஹோமங்கள் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறும். இதன் முதன் நிகழ்வாக செவ்வாய்கிழமையான இன்று காலை கலபாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.