பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2025 12:12
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் டிச. 30 வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து உற்ஸவம் நடைபெற்று வருகிறது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் டிச. 20 முதல் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, பகல் பத்து உற்ஸவத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ,ரத வீதிகளில் புதுச்சேரி சப்பரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் எழுந்தருள திருவீதி உலா நடைபெற்று வருகிறது. டிச. 30 அதிகாலை 4:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பும் நடைபெற உள்ளது.